அறிவியல் வளர, வளர மனிதர்களின் சாதனைகளும் வளர்ந்தபடியே உள்ளன. மனிதர்கள் விரைவிலேயே பூமியைவிட்டு வெளியே வேற்று கிரகங்களில் வசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இப்போதே நிலாவுக்கு பயணத் திட்டம், நிலாவில் நிலம் வாங்கும் திட்டம், செவ்வாய் பயணத் திட்டம் என இணையதளங்களில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் ஏராளமான ஆர்வலர்கள் இந்த திட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் 2020ல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பயண திட்டங்களை வடிவமைத்துள்ளது. இதையடுத்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு கட்டணம் 7 டாலர் என அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்தியர்கள் சிலரும் செவ்வாய் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் இந்த திட்டத்தில் வெறும் 5 இந்தியர்கள் மட்டுமே முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.