bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false" expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday, September 29, 2011

வெண்டைகாயின் மருத்துவம்...!!!

நன்றி : TAMILMEDI.COM
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர்.

இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர். பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர்.

முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள். அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள்.

அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு. வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும்.

வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும்.

சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

Post Comment

Post Comment

Wednesday, September 28, 2011

சிரிப்பு...!!!


சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே


சொந்தமான கையிருப்பு – வேறு


ஜீவராசிகள் செய்ய முடியாத


செயலாகும் இந்தச் சிரிப்பு


இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு


இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு
எனச் சிரிப்பைக் கலைவாணர் வகைப்படுத்தினார்.
புத்தரின் நேரடிச் சீடர் சாரிபுத்தா சிரிப்பை வகைப்படுத்தியுள்ளார் என்பது தெரியுமா?
சிரிப்பை அவர் 6 வகையாகச் சொல்கிறார்.
முதல் வகை- ஸிதா
முகபாவத்தின் அதிநுட்பங்களுடன் கட்டுப்பாடாய் வெளிப்படும் புன்னகை. இது நாமாக செய்யக்கூடியது அல்ல. புத்தரைப் போன்ற அதிநுட்ப உணர்வும் கவனமும் உடையவர்களுக்கே இது வாய்க்கும்.
இரண்டாவது வகை – ஹஸிதா
இது மெலிதான உதட்டசைவுடன், பற்களின் முனைப்பகுதிகள் வெளிப்படுமாறு அமைவது.
மூன்றாவது வகை – விஹஸிதா
சிறிதளவு சிரிப்புடன் கூடிய விரிந்த புன்னகை
நான்காவது வகை – உபஹஸிதா
உரத்த ஒலியளவுடன் கூடிய அழுத்தமான சிரிப்பு. தலை மற்றும் கையசைவுடன் இணைந்தது.
ஐந்தாவது வகை – அபஹஸிதா
கண்ணீரை வரவழைக்கக்கூடிய சிரிப்பு
ஆறாவது வகை – அதிஹஸிதா
ஒட்டுமொத்த உடம்பும் குலுங்கச்சிரிக்கிற மூர்க்கத்தனமான பெரும் கூச்சலுடன் கூடிய சிரிப்பு!
சிரிப்பு மாதிரி சின்ன விஷயங்கள்கூட கவனம் செலுத்தி நோக்கும்போது மிகப்பெரிய விஷயமாகிவிடுகிறது. அதுவே ஒட்டுமொத்த உலகமாகிவிடுவதும் உண்டு. தியானத்துடன் செய்யும்போது அது இறைவனாகவே மாறிவிடுகிறது.

நன்றி : வல்லமை.
 

Post Comment

Post Comment

அதிரடி சோதனை....!!!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், உயர்கல்வி, "மாஜி' அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு சொந்தமான, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்கள் என, 20 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில், உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி(எ) தெய்வசிகாமணி. இவர், அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், போதுமான ஆதாரங்கள் கிடைத்ததால், பொன்முடி மீது, 2008, ஏப்ரல் 13ம் தேதி முதல், கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, கூடுதல் ஆதாரங்களுக்காக, சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சோதனையின் போது, முக்கிய ஆவணங்கள் பல சிக்கியுள்ளன. சென்னையில் மட்டும், 11 இடங்களில் சோதனை நடந்தது.இது தவிர விழுப்புரத்தில், ஏழு இடங்கள், கடலூர், புதுச்சேரி என, 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை, சைதாப்பேட்டையில், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமான வீட்டில், காலை 7 மணிக்கு, டி.எஸ்.பி., பொன்னுச்சாமி தலைமையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

வீட்டில், பொன்முடியின் மகன்கள் கவுதம், அசோக் மற்றும் இருவரது மனைவியர் இருந்தனர். பிற்பகல் 3 மணி வரை நீடித்த சோதனையில், வங்கி பாஸ்புக், ஏராளமான ஆவணங்கள், இப்பகுதியில் கட்டப்பட்டு வரும் மூன்று மாடி கட்டடங்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதே போல், கே.கே.நகர், எழும்பூர், ராஜா அண்ணாமலை புரத்தில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.மேலும், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. சென்னை சைதாப்பேட்டையில் ரெய்டு நடந்த போது, தி.மு.க.,வினர் வீட்டின் முன் கூடியிருந்தனர். விழுப்புரத்தில், பொன்முடியின் நிரந்தர வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்ட போது, ஆதிசங்கர் எம்.பி., தலைமையில், 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கூடியிருந்தனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

"சட்ட ரீதியாக சந்திப்போம்' : : பொன்முடி மீதான நடவடிக்கைகள் குறித்து, விழுப்புரத்தில் ஆதிசங்கர் எம்.பி., கூறும்போது, "பொன்முடி உரிய ஆவணங்களை வைத்துள்ளார். எந்த வழக்கையும் பொன்முடியும், கட்சியினரும் சட்ட ரீதியாக சந்திக்க தயார். ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அரசின் அடக்குமுறைக்கு இது உதாரணம்' என்றார்.

பொன்முடியின் சொத்து கணக்கு : முன்னாள் அமைச்சர் பொன்முடி, 2006, சட்டசபை தேர்தலில் மனு தாக்கல் செய்தபோது, தனக்கு, 22 லட்சத்து, 43 ஆயிரத்து, 611 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 18 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும், தன் மனைவி விசாலாட்சிக்கு, 96 லட்சத்து, 17 ஆயிரத்து, 247 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 1 கோடியே, 60 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் அசையா சொத்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மனு தாக்கலின் போது, பொன்முடியின் பெயரில், 48 லட்சத்து, 79 ஆயிரத்து, 704 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 59 லட்சத்து, 14 ஆயிரத்து, 250 அசையா சொத்தும், அவரது மனைவி பெயரில், 3 கோடியே, 78 லட்சத்து, 11 ஆயிரத்து, 815 ரூபாய் அசையும் சொத்துக்களும், 3 கோடியே, 36 லட்சத்து, 26 ஆயிரத்து, 940 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சோதனை நடந்த இடங்கள்:

விழுப்புரம்:
1. சண்முகாபுரம் காலனி, பொன்முடி வீடு
2. நடேசன் நகர். பொன்முடி சகோதரர் நடனசிகாமணி வீடு
3. ஜவகர்லால் நேரு சாலை, பொன்முடி சகோதரர் தியாகராஜன் வீடு
4. ஜவகர்லால் நேரு சாலை, பொன்முடி சகோதரர் தியாகராஜன் மரகதம் மருத்துவமனை
5. பழைய கோர்ட் சாலை, பொன்முடியின் நண்பர் மணிவண்ணன் வீடு
6. காப்பியம்புலியூர், "சிகா டிரஸ்ட்' அலுவலகம்.
7. வழுதரெட்டி, கணேஷ் நகர், பொன்முடி நண்பர் திரிசங்கு வீடு

சென்னை:
8. சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி, பொன்முடி மனைவி விசாலாட்சி வீடு.
9. கே.கே.நகர், பொன்முடி சம்பந்தி டாக்டர்.பாலசுப்ரமணியம் வீடு
10. கே.கே.நகர், பாலசுப்ரமணியத்தின் கே.எம்., நர்சிங் ஹோம்
11. கே.கே.நகர், கே.எம்., மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
12. எழும்பூர், எத்திராஜ் சாலை, பொன்முடி நண்பர் நஜிமுதீனின் வீடு
13. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ், பொன்முடி மனைவி விசாலாட்சியின் எவர் ஸ்டைல் என்டர்பிரைசஸ்.
14. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ். பொன்முடி மனைவி விசாலாட்சியின் விஷால் எக்ஸ்போ அலுவலகம்
15. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ், பொன்முடி மகன் கவுதமின் காயல் பொன்னி அண்டு கோ நிறுவன அலுவலகம்.
16. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ், சூர்யா கல்வி அறக்கட்டளை அலுவலகம்
17. வேப்பேரி, பர்னாஸ் இன்டர்நேஷனல் அலுவலகம்
18. தி.நகர், பொன்முடியின் சம்பந்தி டாக்டர். பாலசுப்ரமணியத்தின் வீடு

கடலூர்:19. திருப்பாப்புலியூர், சிதம்பரம் ரோடு, பொன்முடி மனைவியின் விஷால் ஆட்டோ மொபைல்ஸ்

புதுச்சேரி:
20. குயவர்பாளையம், பொன்முடி சகோதரர் ராஜாசிகாமணியின் விசாலாட்சி பல் மருத்துவமனை.

Post Comment

Post Comment