டிரிபோலி : லிபிய பிரச்னையில் சுமுகமான முடிவை ஏற்படுத்த, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருக்கிறார்.லிபிய பிரச்னையில், அதன் தலைவர் கடாபியை பத்திரமாக வெளியேற்றி, நிலையான அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்காக, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாக, "டாக் ரேடியா 702' செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த ஏப்ரலில் நடந்த ஆப்ரிக்க யூனியன் கூட்டத்தில், லிபிய விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சில மணி நேரங்களிலேயே தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து, இப்போது தென் ஆப்ரிக்க அதிபர் அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்றும் டிரிபோலியில் கடாபியின் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பல இடங்களில், "நேட்டோ' விமானப் படைகள் குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கின.இதில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக லிபிய அரசு கூறியதை, "நேட்டோ' மறுத்துள்ளது.
நன்றி : தினமலர்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment