கேரள மாநிலம், எர்ணாகுளம் பள்ளி மாணவி விபசாரத்தில் தள்ளப்பட்டு பலரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக காண்ட்ராக்டர் மணிகண்டன் உட்பட 50க்கும் மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 13 பேரை மாணவி நீதிபதியிடம் நேரடியாக அடையாளம் காட்டியுள்ளார். இந்த நிலையில் ஆலுவா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டபோது மீண்டும் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாக்குமூலத்தில் அவர், ‘’20 மாதங்களாக நான் தொடர்ந்து பலாத்காரம் செய்யப் பட்டேன். அதிருப்பள்ளி என்ற இடத்தில் ஒரு வீட்டில் ஒருவருக்காக என்னை புரோக்கர் உடன் தந்தை அழைத்து சென்றார். அங்கு சென்றடைந்தபோது அவருக்கு அடியாட்களாக மேலும் 4 வாலிபர்கள் அங்கு நின்றுகொண்டிருந்தனர்.
என்னுடன் வந்தது யார் என்று அவர்கள் கேட்டனர், அப்போது எனது தந்தை என்று நான் கூறினேன். அவர்கள் என்னிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். நான் எல்லா விபரங்களையும் தெரிவித்தேன்.
அவர்கள் எனது தந்தையிடம் நான் யார் என்று கேட்டனர். அப்போது எனது தந்தை தனக்கு தெரிந்த பெண் என்று மட்டும் கூறினார்.
எல்லா இடங்களிலும் தந்தை இப்படித்தான் கூறுவது வழக்கம். ஆனால் அங்கிருந்த நபர் என்னை நம்பினார்.
எனது செல்போனில் இருந்த குடும்ப போட்டோவையும் நான் அங்கிருந்த நபரிடம் காண்பித்தேன். பின்னர் அங்கிருந்தவர்கள் எனது தந்தையை தாக்கினர். புரோக்கரையும் விரட்டியடித்தனர். பின்னர் எங்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.
பணம் சம்பாதிப்பதற்காக எனது தந்தை என்னை அவரது பைக்கில் அமர்த்தி கோழிக்கோடு வரை அழைத்து சென்று பலருக்கும் விருந்து படைக்க செய்தார். ஒருமுறை பெங்களூரில் தந்தையின் அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது மற்றொரு நபர் என்னை பலாத்காரம் செய்தார்.
எனது தந்தை அதனை காணாதது போன்று தூங்கிக்கொண்டிருந்தார். நான் பலமுறை அவரை தட்டி எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்கவில்லை.
ஒரு கட்டத்தில் உறவினரான இளைஞர் ஒருவரிடம் எல்லா விஷயங்களையும், எனக்கு நடந்து வரும் கொடுமைகளையும் தெரிவித்தேன். அவர் வீட்டில் உள்ள உறவினர்களிடம் நீ தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் நானும் செயல்பட்டேன். அதன் பின்னர் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்’’என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : விழியே பேசு.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
மிகப்பெரிய அநியாயம் இது....!
ReplyDeleteகெர்டுமையான விஷயம்...
ReplyDeleteஉண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்ப்பட வேண்டும்
கடும் நடவடிக்கை தேவை...
ReplyDelete