கொழும்பு, மே.26: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா கூறினார்.
இலங்கைத் தமிழ் இணையதளங்கள் இதைத் தெரிவித்துள்ளன.
கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் சாட்சியமளிக்கும்போது அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரை ராணுவத்தினருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.
அதனையே நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னைப் பேட்டி கண்டதில்லை. சண்டே லீடர் சார்பில் வேறொரு ஊடகவியலாளரே என்னைப் பேட்டி கண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு இருந்தார். நோ்காணலின் போது அவர் எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை. அதன் பின் என்னுடன் தனிப்பட்ட ரீதியில் பேசும்போது நான் மேற்கண்ட விஷயத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன்.
ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று சரத் பொன்சேகா தனது சாட்சியத்தின்போது கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : தினமணி
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
m ம் ம் ஓக்கே.. நெல்லை பதிவர் சந்திப்புக்கு வந்தால் உங்க வீட்டில் ஓசி சாப்பாடு உண்டா? ஹா ஹா
ReplyDeleteகண்டிப்பா வாங்க சார்...
ReplyDelete