bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false" expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, September 28, 2011

அதிரடி சோதனை....!!!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், உயர்கல்வி, "மாஜி' அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு சொந்தமான, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்கள் என, 20 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில், உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி(எ) தெய்வசிகாமணி. இவர், அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், போதுமான ஆதாரங்கள் கிடைத்ததால், பொன்முடி மீது, 2008, ஏப்ரல் 13ம் தேதி முதல், கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, கூடுதல் ஆதாரங்களுக்காக, சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சோதனையின் போது, முக்கிய ஆவணங்கள் பல சிக்கியுள்ளன. சென்னையில் மட்டும், 11 இடங்களில் சோதனை நடந்தது.இது தவிர விழுப்புரத்தில், ஏழு இடங்கள், கடலூர், புதுச்சேரி என, 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை, சைதாப்பேட்டையில், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமான வீட்டில், காலை 7 மணிக்கு, டி.எஸ்.பி., பொன்னுச்சாமி தலைமையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

வீட்டில், பொன்முடியின் மகன்கள் கவுதம், அசோக் மற்றும் இருவரது மனைவியர் இருந்தனர். பிற்பகல் 3 மணி வரை நீடித்த சோதனையில், வங்கி பாஸ்புக், ஏராளமான ஆவணங்கள், இப்பகுதியில் கட்டப்பட்டு வரும் மூன்று மாடி கட்டடங்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதே போல், கே.கே.நகர், எழும்பூர், ராஜா அண்ணாமலை புரத்தில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.மேலும், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. சென்னை சைதாப்பேட்டையில் ரெய்டு நடந்த போது, தி.மு.க.,வினர் வீட்டின் முன் கூடியிருந்தனர். விழுப்புரத்தில், பொன்முடியின் நிரந்தர வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்ட போது, ஆதிசங்கர் எம்.பி., தலைமையில், 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கூடியிருந்தனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

"சட்ட ரீதியாக சந்திப்போம்' : : பொன்முடி மீதான நடவடிக்கைகள் குறித்து, விழுப்புரத்தில் ஆதிசங்கர் எம்.பி., கூறும்போது, "பொன்முடி உரிய ஆவணங்களை வைத்துள்ளார். எந்த வழக்கையும் பொன்முடியும், கட்சியினரும் சட்ட ரீதியாக சந்திக்க தயார். ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அரசின் அடக்குமுறைக்கு இது உதாரணம்' என்றார்.

பொன்முடியின் சொத்து கணக்கு : முன்னாள் அமைச்சர் பொன்முடி, 2006, சட்டசபை தேர்தலில் மனு தாக்கல் செய்தபோது, தனக்கு, 22 லட்சத்து, 43 ஆயிரத்து, 611 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 18 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும், தன் மனைவி விசாலாட்சிக்கு, 96 லட்சத்து, 17 ஆயிரத்து, 247 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 1 கோடியே, 60 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் அசையா சொத்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மனு தாக்கலின் போது, பொன்முடியின் பெயரில், 48 லட்சத்து, 79 ஆயிரத்து, 704 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 59 லட்சத்து, 14 ஆயிரத்து, 250 அசையா சொத்தும், அவரது மனைவி பெயரில், 3 கோடியே, 78 லட்சத்து, 11 ஆயிரத்து, 815 ரூபாய் அசையும் சொத்துக்களும், 3 கோடியே, 36 லட்சத்து, 26 ஆயிரத்து, 940 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சோதனை நடந்த இடங்கள்:

விழுப்புரம்:
1. சண்முகாபுரம் காலனி, பொன்முடி வீடு
2. நடேசன் நகர். பொன்முடி சகோதரர் நடனசிகாமணி வீடு
3. ஜவகர்லால் நேரு சாலை, பொன்முடி சகோதரர் தியாகராஜன் வீடு
4. ஜவகர்லால் நேரு சாலை, பொன்முடி சகோதரர் தியாகராஜன் மரகதம் மருத்துவமனை
5. பழைய கோர்ட் சாலை, பொன்முடியின் நண்பர் மணிவண்ணன் வீடு
6. காப்பியம்புலியூர், "சிகா டிரஸ்ட்' அலுவலகம்.
7. வழுதரெட்டி, கணேஷ் நகர், பொன்முடி நண்பர் திரிசங்கு வீடு

சென்னை:
8. சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி, பொன்முடி மனைவி விசாலாட்சி வீடு.
9. கே.கே.நகர், பொன்முடி சம்பந்தி டாக்டர்.பாலசுப்ரமணியம் வீடு
10. கே.கே.நகர், பாலசுப்ரமணியத்தின் கே.எம்., நர்சிங் ஹோம்
11. கே.கே.நகர், கே.எம்., மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
12. எழும்பூர், எத்திராஜ் சாலை, பொன்முடி நண்பர் நஜிமுதீனின் வீடு
13. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ், பொன்முடி மனைவி விசாலாட்சியின் எவர் ஸ்டைல் என்டர்பிரைசஸ்.
14. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ். பொன்முடி மனைவி விசாலாட்சியின் விஷால் எக்ஸ்போ அலுவலகம்
15. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ், பொன்முடி மகன் கவுதமின் காயல் பொன்னி அண்டு கோ நிறுவன அலுவலகம்.
16. ஆர்.ஏ., புரம், ரமணீயம் டவர்ஸ், சூர்யா கல்வி அறக்கட்டளை அலுவலகம்
17. வேப்பேரி, பர்னாஸ் இன்டர்நேஷனல் அலுவலகம்
18. தி.நகர், பொன்முடியின் சம்பந்தி டாக்டர். பாலசுப்ரமணியத்தின் வீடு

கடலூர்:19. திருப்பாப்புலியூர், சிதம்பரம் ரோடு, பொன்முடி மனைவியின் விஷால் ஆட்டோ மொபைல்ஸ்

புதுச்சேரி:
20. குயவர்பாளையம், பொன்முடி சகோதரர் ராஜாசிகாமணியின் விசாலாட்சி பல் மருத்துவமனை.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Post Comment

Post Comment

1 comment:

  1. இது நல்ல செய்தியா இல்லை கெட்ட செய்தியா?

    ReplyDelete