bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false" expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, May 28, 2011

ரஜினி சிங்கப்பூரில்


சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 27.05.2011 அன்று இரவு மருத்துவ சிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முதல் கட்டமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சுவாசக்கோளாறுக்கு சிகிச்சை தரப்படுவதாகவும், பிரபல சுவாசக்கோளாறு சிகிச்சை மருத்துவர் கியான் சங் ஒங் சிகிச்சை அளித்து வருவதாகவும், ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசியாவிலேயே மிகவும் சிறந்த மருத்துவமனை என கருதப்படும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் இம்மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி : நக்கீரன் 

Post Comment

Post Comment

Thursday, May 26, 2011

பொன்சேகா சாட்சியம்

கொழும்பு, மே.26: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா கூறினார்.


இலங்கைத் தமிழ் இணையதளங்கள் இதைத் தெரிவித்துள்ளன.

கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் சாட்சியமளிக்கும்போது அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரை ராணுவத்தினருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.

அதனையே நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னைப் பேட்டி கண்டதில்லை. சண்டே லீடர் சார்பில் வேறொரு ஊடகவியலாளரே என்னைப் பேட்டி கண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு இருந்தார். நோ்காணலின் போது அவர் எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை. அதன் பின் என்னுடன் தனிப்பட்ட  ரீதியில் பேசும்போது நான் மேற்கண்ட விஷயத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன்.

ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.  மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று சரத் பொன்சேகா தனது சாட்சியத்தின்போது கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.


நன்றி : தினமணி 

Post Comment

Post Comment

வீரபாண்டி ஆறுமுகம் புலம்பல்

சேலம் : ""சட்டசபை தேர்தல் தோல்வி நமக்கு புதியதல்ல; சங்ககிரியில் என்னுடைய தோல்வியை கட்சியினரே மிகவும் எதிர்பார்த்தனர்,'' என தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம் நிர்வாகிகளிடத்தில் கூறினார். சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி போட்டியிட்ட, 11 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. சங்ககிரி தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகம் வெற்றி பெறுவார் என நம்பிக்கையுடன் இருந்த தொண்டர்களும் ஏமாற்றமடைந்தனர்.
தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற பொது உறுப்பினர் கூட்டம், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கலைஞர் மாளிகையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது: ஜூன் 3ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாளை, சிறப்பாக கொண்டாட வேண்டும். தேர்தலின் போது அகற்றப்பட்ட கட்சி கொடிக் கம்பங்களை, அந்தந்த இடங்களில் புதியதாக நிறுவி வர்ணம் பூசி, கொடியேற்ற வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.
தேர்தல் தோல்வி நமக்கு புதியதல்ல; மக்களுக்காக எவ்வளவோ நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் தி.மு.க., தோல்வியை தழுவவில்லை. தமிழகம் முழுவதும் தோல்வி நிலைக்கு தள்ளப்பட்டது. சங்ககிரியில் என்னுடைய தோல்வியை, நமது கட்சியினர் பலர் எதிர்பார்த்தனர். இனி தோல்வியை மறந்து, தலைவர் பிறந்த நாள் விழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசினார்.


நன்றி : தினமலர் 

Post Comment

Post Comment

Wednesday, May 25, 2011

கடாபி

டிரிபோலி : லிபிய பிரச்னையில் சுமுகமான முடிவை ஏற்படுத்த, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருக்கிறார்.லிபிய பிரச்னையில், அதன் தலைவர் கடாபியை பத்திரமாக வெளியேற்றி, நிலையான அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்காக, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாக, "டாக் ரேடியா 702' செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த ஏப்ரலில் நடந்த ஆப்ரிக்க யூனியன் கூட்டத்தில், லிபிய விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சில மணி நேரங்களிலேயே தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து, இப்போது தென் ஆப்ரிக்க அதிபர் அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்றும் டிரிபோலியில் கடாபியின் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பல இடங்களில், "நேட்டோ' விமானப் படைகள் குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கின.இதில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக லிபிய அரசு கூறியதை, "நேட்டோ' மறுத்துள்ளது.

நன்றி : தினமலர் 

Post Comment

Post Comment